potato french fry Evening Snacks Recipe At Home

Potato Kurkure At Home | Evening Snacks Recipe
இன்று மாலை பொழுதை கழிப்பது போல வீட்டிலேயே ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட போறோம்.

நாம் கடைகளில் வாங்கும் போட்டோ டோ குர்குரே சிப்ஸ் இப்பொழுது செய்யப் போகிறோம். நாம் இதை வீட்டிலேயே செய்வதால் எந்த ஒரு தேவையில்லாத பொருட்களை சேர்க்க போவது இல்லை.இதனை நம் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடலாம். இதனை எவ்வாறு செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.

செய்ய தேவையான பொருட்கள்
இரண்டு உருளைக்கிழங்கு
பச்சைமிளகாய் 2
டம்ளர் தண்ணீர்
ஒரு ஸ்பூன் உப்பு
பெப்பர் பவுடர் சிறிது
கரம் மசாலா கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் தேவையான அளவு
மல்லித்தூள் தேவையானது
காண்பிளேவர் சிறிது
அரிசி மாவு சிறிது
potato french fry Evening Snacks Recipe At Home
செய்முறை

இரண்டு உருளைக்கிழங்கை தோல் நீக்கி எடுத்துக் கொண்டு அதனை சிறிது நீரில் உப்பை போட்டு 20 நிமிடம் ஊறவைக்கவும். உருளைக்கிழங்கை எடுத்து பொடி பொடியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் போட்டு கழுவி எடுத்துக் கொள்ளவும். தண்ணீர் இல்லாத படி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு மேலே கூறப்பட்டுள்ள தேவையான பொருட்களை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். பின்னர் சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். உங்களுக்கு காரம் தேவை என்றால் இன்னும் சிறிது மிளகாய் தூளை மேலே தூவிக் கொள்ளவும்.
இதனை காணொளியாக காண கீழே பாருங்கள்