Benefits Of Red BANANA

தினம் ஒரு செவ்வாழை சாப்பிட்டால் என்ன பயன்……!
முக்கனியில் ஒன்றுதான் இந்த வாழை. மூன்றாவது இடத்தைப் பிடித்தது 🍌 வாழை நம் உடலுக்கு சக்தி அளிக்கிறது. வாழையில் எத்தனை ரகங்கள் உள்ளன. அவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக நம் உடலுக்கு வலிமையை அளிக்கிறது. இதில் நாம் இன்று முக்கியமாக பார்ப்பது செவ்வாழை.
செவ்வாழை பற்றிய முக்கிய அம்சங்கள்:-

சிவப்பு வாழைப்பழங்கள் என்பது சிவப்பு-ஊதா தோல் கொண்ட வாழைப்பழங்களின் ஒரு குழுவாகும். சில பொதுவான கேவென்டிஷ் வாழைப்பழத்தை விட சிறியதாகவும் குண்டாகவும் இருக்கும், மற்றவை மிகவும் பெரியவை. பழுத்த போது, பச்சையான சிவப்பு வாழைப்பழங்கள் கிரீம் முதல் வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் சதை கொண்டிருக்கும்.
சிவப்பு வாழைப்பழங்கள் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து சிவப்பு தோல் கொண்ட வாழைப்பழங்களின் துணைக்குழு ஆகும். அவை மென்மையாகவும் பழுத்தவுடன் இனிமையான சுவையுடனும் இருக்கும். சிலர் வழக்கமான வாழைப்பழத்தைப் போல சுவைப்பதாகச் சொல்கிறார்கள் – ஆனால் ராஸ்பெர்ரி இனிப்பு சுவையுடன் இருக்கும். அவை பெரும்பாலும் இனிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் சுவையான உணவுகளுடன் நன்றாக இணைக்கப்படுகின்றன.
செவ்வாழையில் அதிகமான பொட்டாசியம் சத்துக்கள் இருப்பதால் இவை தினமும் ஒரு பழம் என்ற விகிதத்தில் நாம் உண்டு வந்தால் நமக்கு சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகள் அறவே வராது.
நம் உடலில் உள்ள எலும்புகள் அனைத்தும் நிறைவு பெற தினமும் ஒரு பழம் எடுத்துக் கொண்டால் மிகவும் நல்லது.

இந்த செவ்வாழையில் அதிகபட்சமான பொட்டாஷியம் இருப்பதால் இதயம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் புற்றுநோய்கள் வராமல் தவிர்க்கிறது. உடல் எடையை குறைப்பதற்கு இது வெகுவாக உதவுகிறது.
நம் உடலில் இருக்கும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும் போது ரத்த அணுக்களின் அளவை சீராக பராமரிக்க இந்த செவ்வாழை மிகவும் உதவுகிறது.
நெஞ்செரிச்சலா நீங்கள் அவதிப்பட்டு கொண்டு இருந்தாள் தினமும் ஒரு செவ்வாழை எடுத்துக்கொண்டால் ஒரு ஒரு சில நாட்களில் உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.